மைசூர்:தீயில் கருகிய 11,000 புத்தகங்கள் கொண்ட நூலகம்-ஏழை முதியவருக்கு குவியும் நிதியதவி.

Default Image

மைசூரில்,ஏழை முதியவர் ஒருவர் நடத்தி வந்த பொது நூலகம் ஒன்று தீயில் எரிந்து தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் மைசூரில் உள்ள உதயகிரி பகுதியில் சையத் இசாக் என்ற 65 வயதுடைய முதியவர் ஒருவர் வசித்து வருகிறார்.கூலி வேலை செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பொது நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

2011ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்நூலகத்தில்,திருக்குறள்,குரான்,பொது அறிவு உள்ளிட்ட 11,000 நூல்கள் இருந்தன.கடந்த வெள்ளிக்கிழமையன்று,காலை சையத் நூலகத்திற்கு வந்தபோது நூலகம் தீயில் எரிந்து தரைமட்டமாய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனால் சையத், நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.மேலும்,நூலகம் எறிந்த சம்பவம் சையதிற்கும்,அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளது.

இதுகுறித்து சையது கூறுகையில்,”சிறு வயதில் என்னால் பள்ளிக்கு சென்று படிக்க முடியவில்லை,அதனால் தான் மற்றவர்களாவது படிக்க வேண்டும் என்று இந்த பொது நூலகத்தை ஆரம்பித்தேன்.மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறிய “ஒரு சிறந்த புத்தகம் 100 நல்ல நண்பர்களுக்கு சமம்” என்ற வசனம் என் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது.ஆகவே எரிந்த நூலகத்திற்கு பதிலாக வேறொரு நூலகத்தை அமைப்பேன்”,என்று கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து முதியவருக்கு ஆதராவக சிலர் நிதி திரட்டி வருகின்றனர்.சம்பவம் நடந்த மூன்று நாட்களுக்குள் ரூ.17லட்சம் நிதயுதவி கிடைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்