மருத்துவ பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டம் ரத்து-மத்திய அரசு அறிவிப்பு…!

கொரோனா மீட்புப் பணியில் உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா மீட்புப் பணியின் போது உயிரிழக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை ஏப்ரல் 26 ஆம் தேதியன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.
இந்தக் காப்பீட்டு திட்டத்தில்,22 லட்சம் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும்,இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை சார்பில்,மார்ச் மாதம் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில்,அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டத்தை திரும்பப் பெறுவதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இவ்வேளையில்,மத்திய அரசின் இந்த அறிவிப்பு மருத்துவப் பணியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025