முன்னாள் துணை முதல்வரின் மகன், மருமகள், பேத்தி கொலை..!

மத்திய பிரதேச முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர்.
பியரேலால் கன்வாரின் மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோரின் சடலங்கள் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் கூர்மையான ஆயுதங்களால் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து கோர்பாவின் எஸ்.பி. அபிஷேக் மீனா கூறுகையில், ஹரிஷ் கன்வார், சுமித்ரா கன்வார் மற்றும் ஆஷி கன்வார் ஆகியோரின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது என தெரிவித்தார். இந்த சம்பவத்தைக் கேட்ட பின்னர், காங்கிரஸ் அமைச்சர் ஜெய் சிங் அகர்வால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025