#BigNews:காபூலில் உள்ள பெண்கள் பள்ளி அருகே குண்டுவெடிப்பு; 30 பேர் கொல்லப்பட்டனர்

மேற்கு காபூலின் ஷியைட் மாவட்டத்தில் ஒரு பள்ளி அருகே சனிக்கிழமை வெடிகுண்டு வெடித்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பலர் பெண் மாணவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் நடந்த பள்ளி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான கூட்டு உயர்நிலைப் பள்ளியாகும், அவர்கள் மூன்று ஷிப்டுகளில் இங்கு படிக்கின்றனர்.கார் வெடிகுண்டு வெடிப்புடன் இந்த தாக்குதல் தொடங்கியது, அதைத் தொடர்ந்து இரண்டு ராக்கெட் தாக்குதல்கள் நடந்தன.மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
புத்தகங்கள் மற்றும் பள்ளி பைகள் இரத்தக் கறை படிந்த சாலையில் சிதறிக்கிடந்ததை டோலோ நியூஸ் என்ற அந்நாட்டு தொலைக்காட்சி ஊடகம் காட்டியுள்ளது.
இது குறித்து,உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், தாரிக் அரியன் கூறுகையில் குறைந்தது 25 பேர் இறந்திருக்கக்கூடும் பலர் காயமடைந்துள்ளனர் என்று கூறினார்.இதுவரை 46 பேர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் 30 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.ஆனால் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபிஹுல்லா முஜாஹித் இந்த தாக்குதலை மறுத்ததோடு இந்த சம்பவத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளார்.