இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேர் கொரோனாவால் பாதிப்பு….930 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 930 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,06,63,665 ஆக உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் 43,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 9 ஆயிரம் அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,06,63,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 930 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,04,211 பேர் உயிரிழந்துள்ளனர்.
- தொற்றில் இருந்து ஒரே நாளில் 47,240 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,99,534 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,59,920 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டில் இதுவரை 36,13,23,548 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025