#Breaking: நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி வழக்கு தொடர்ந்ததால் அபராதம் விதித்து, அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்கதக்கல்ல என்றும் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், நடிகர் விஜய், தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிட வில்லை என்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர், நடிகர் என குறிப்பிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் @actorvijay வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.#actorvijay #highcourt #chennai pic.twitter.com/iWUffLuS6r
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 13, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025