இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்க அனுமதி -கெஜ்ரிவால் அறிவிப்பு..!

டெல்லியில் இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.
டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை முன்னிட்டு, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வாரச்சந்தைகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மக்களின் வசதிக்காகவும், வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் சந்தைகளை திறக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ஒரு மண்டலத்திற்கு ஒரு வாரச் சந்தையில் அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
சாலையோரங்களில் வாரச்சந்தை செயல்பட அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்திற்கு மேலாகவும், இறப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025