செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றும் போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களை தூவ ஏற்பாடு..?

செங்கோட்டையில் பிரதமர் கொடியை ஏற்றும் போது வானில் இருந்தபடி மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் நாளை சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றிய பிறகு பாதுகாப்பு படைக்கு சொந்தமான MI17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் இருந்தபடி மலர்களை தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தின விழா போதுதான் இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான போர் விமானங்கள், இராணுவத்திற்கு சொந்தமான டாங்குகள் அணிவகுத்து செல்வார்கள்.
சுதந்திர தின விழாவை பொறுத்தவரை பிரதமர் மோடி உரையாற்றுவார், சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். ஆனால் இந்த முறை இந்திய பாதுகாப்பு படைக்கு சொந்தமான MI17 ரக இரண்டு ஹெலிகாப்டர்கள் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றும்போது வானில் இருந்தபடி மலர்களை தூவுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த சுதந்திர தின விழாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமான இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவ ஏற்பட்டு செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சுதந்திர தின விழாவின் போது பாதுகாப்பு படைக்கு சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025