திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ஆ.ராஜா உடலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்திய முதல்வர்…!

சேலம் பூலாவரி கிராமத்தில் உள்ள இல்லத்தில் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சேலத்தில் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ராஜா மாரடைப்பு காரணமாக காலமானார். இவர், தனது பிறந்தநாளான இன்று தனது தந்தையின் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிறந்தநாளன்று உயிரிழந்த ராஜா, திமுக தேர்தல் பணிக்குழுவின் செயலாளராக இருந்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில், சேலம் பூலாவரி கிராமத்தில் உள்ள இல்லத்தில் வீரபாண்டி ராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025