#Breaking:ஓபிஎஸ்,ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூர் ஜெயச்சந்திரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலில் விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை எனக்கூறி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த டிச.7 ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு,அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு? என்றும், எதுவுமே இல்லாமல் தேர்தல் ஆணையத்தை இந்த வழக்கில் சேர்த்ததால் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என ஆராய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியது.
அதன்பின்னர்,இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுக உட்கட்சி தேர்தலில் தலையிட்டு கண்காணிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என்றும்,மேலும்,இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் கூறி இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025