இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும் – டிடிவி தினகரன்

நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘எல்லைகளைக் கடந்து உலகெங்கும் கொண்டாடப்படுகிற ஆங்கிலப் புத்தாண்டில் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் புதுவடிவமான ஓமிக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன்.
தமிழகத்தின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் நலன்களையும் காத்து நிற்பதற்கான வலிமையைப் புத்தாண்டு தந்திடட்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்து மாண்புகளோடும், வலிமையோடும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கான நம்பிக்கையை இப்புத்தாண்டு விதைக்கட்டும். தொழில்களும், விவசாயமும் செழித்தோங்கி உழைக்கிற மக்கள் அனைவருக்கும் 2022 புத்தாண்டில் நன்மைகள் நிறைந்திட வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மனிதநேயம் தழைத்திட, எல்லாரும் எல்லாமும் பெற்றிட இல்லாமை இல்லாத நிலை உருவாகிட 2022 புத்தாண்டில் வழி பிறக்கட்டும். அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனாவின் புதுவடிவமான ஓமிக்ரான் பயம் நீங்கி, ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒவ்வொருவரும் வாழ்ந்திட புத்தாண்டில் இறையருளை வேண்டுகிறேன். pic.twitter.com/WMSTcaDJls
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 31, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025