தமிழகத்தை சாதி, மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தை சாதி, மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள் என ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பில் நடைபெற்ற ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழகத்தை சாதி, மதத்தால் சிலர் பிரிக்க நினைக்கிறார்கள். அந்த சதியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மதம், சமய நம்பிக்கை என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள்; ஆனால், நாம் அனைவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும், அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மை அதிகம் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் அங்கிருந்தவர்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி பருகினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025