இந்த போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்யாமல் இருப்பது அழகல்ல..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

8 மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என முதல்வர் பேச்சு.
பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணம் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இன்றைக்கு தமிழ்நாட்டில் அமைந்துள்ள திராவிட மாடல் ஆட்சியை எந்த சூழலிலும், வழி நடத்தி செல்வேன். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமையக்கூடிய ஒரு ஆட்சி. கருப்பையும் சிவப்பையும், யாராலும் பிரிக்க முடியாது.
தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள்; பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு இதனால் தான் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது. பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்திற்கும் கிடைத்ததில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த நுழைவுத்தேர்வு எந்த வகையிலும் நுழைய கூடாது என்பதே நமது கொள்கை. ஆளுநரிடம் நம் கேட்பது ஒப்புதல் இல்லை, முன்வடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க கேட்கிறோம். 8 மக்களின் கோரிக்கையான நீட் விலக்கு முன்வடிவுகளை குடியரசு தலைவருக்கு அனுப்பும் போஸ்ட் மேன் வேலையை கூட ஆளுநர் செய்ய மறுப்பது அவருடைய பதவிக்கு இது அழகல்ல என்று விமர்சித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025