#IPL2022 : அதிரடி காட்டிய குல்தீப் யாதவ்…! டெல்லி அணிக்கு 147 ரன்கள் இலக்கு…!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில், இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய பின்ச் 3 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய நிதிஷ் ராணா, 30-வது பந்தில் அரைசதத்தை கடந்து, 57 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 23 ரன்கள் எடுத்தார். டெல்லி வீரர் குல்தீப் யாதவ் 3 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல், முஷ்டாபிகுர் ரஹ்மான் 3 விக்கெட் எடுத்தார்.
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025