விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம் – ஜெயக்குமார்

கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
திமுக மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம். தமிழ் நமது ஆட்சி மொழியாக உள்ளது. ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கை தான் செயல்பாட்டில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025
விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!
May 12, 2025
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
May 12, 2025