#BREAKING : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்…!

Default Image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

சமீப காலமாகவே அதிமுக-வில் பிரச்சனைகள் தொடர்ந்து  வருகிறது. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இருதரப்பிலும் பல்வேறு கருத்து மோதல்கள் வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்தது.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம், திருச்சியில் பிரமாண்ட மாநாடு ஒன்றை ஓபிஎஸ் நடத்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில், ஓபிஎஸ் இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்ததோடு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி.சண்முகம் உள்ளிட்ட சிலரையும் விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம்  மேற்கொண்டுள்ளார். கோவை விமான நிலையம் வந்த இபிஎஸ்-க்கு அதிமுக எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமியுடன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்தில், எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்