தன்பாலின திருமணம்..! நாடாளுமன்ற முடிவுக்கு விடுக.. மத்திய அரசு!

நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது நீதிமன்றம் அதிகாரம் செலுத்த முடியாது என மத்திய அரசு வாதம்.
தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தை நாடாளுமன்றத்தின் முடிவுக்கு விட்டுவிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணங்கள் தொடர்பான வழக்கில், நாடாளுமன்றத்தின் அதிகாரத்தின் மீது நீதிமன்றம் அதிகாரம் செலுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் முன் வைத்துள்ளது.
இதில் உள்ள சிக்கலான தன்மை மற்றும் சமூக மாற்றங்களில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும். தன்பாலின திருமணங்கள் விவகாரத்தில் மாநில அரசுகள் உள்ளிட்ட தரப்புகளிடம் விவாதம் நடத்த வேண்டியுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆண், பெண் திருமணம் என்றாலும் வயது வரம்பு, பல தார மணம் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. எனவே, இத்தகை விவகாரங்களில் நாடாளுமன்றத்தின் வழியாகவே மாற்றங்களை செய்ய முடியும், தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது ஆண், பெண் திருமணங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.