விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வு கூட்டம்!

விழுப்புரத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்.
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள், மகளிர் குழுக்கள், மீனவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்து வருகிறது. முதலமைச்சர் கள ஆய்வு கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோரும் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சர் தலைமையிலான கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு, டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் சட்டம் ஒழுங்கு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 3 மாவட்ட எஸ்.பிக்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதல்வர் கள ஆய்வு மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025