#BREAKING : கடலூர் மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை…!

கடலூர் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை.
கடலூரில் கடந்த 2018ம் ஆண்டு மீன் பிடிப்பது தொடர்பாக மீனவ கிராம மோதல் சம்பவத்தில் அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி, சரண்ராஜ், சுதாகர் சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மீன் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், மோதலை தடுக்க முயற்சித்த போது, மீனவர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். 2018-ஆம் ஆண்டு முதல் கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.