சிதைந்த உடல், 80% தீக்காயம்..! ஆபத்தான TikTok சவாலை மேற்கொண்ட இளைஞர்..!

அமெரிக்காவின் ஓஹியோவைச் சேர்ந்த சிறுவன் ஆபத்தான TikTok சாவலை செய்ய முயன்றுள்ளார்.
அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள ஓஹியோவைச் சேர்ந்த 16 வயதான மேசன் டார்க் என்ற சிறுவன், TikTok-ல் மிகவும் வைரலான பெனாட்ரில் என்ற சவாலை செய்துள்ளார். அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து ஸ்ப்ரே பெயிண்ட் கேன் மற்றும் லைட்டரைப் பயன்படுத்தி தற்காலிக டார்ச்சை உருவாக்க முயன்றுள்ளார்.
ஆனால், அந்த சாவல் இக்கட்டான சூழலுக்கு மேசனைக் கொண்டு சென்றது. மேசன் டார்க் இதனையே முயற்சித்தபோது அவர் வைத்திருந்த ஸ்ப்ரே பெயிண்ட் கேன் ஒரு பெரிய சத்தத்துடன் வெடித்து, அவர் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைக்க மேசன் அருகிலுள்ள ஆற்றில் குதித்துள்ளார். ஆற்றில் குதித்ததால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.
இதையடுத்து, மேசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் யுஎன்சி (UNC) பர்ன் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறைந்தது ஆறு மாதங்கள் அங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025