தொழிலாளர் நலன் காக்க பாடுபடுவோம்.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மே தின வாழ்த்துச் செய்தி…

CM MK Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மே 1ம் தேதி தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். இந்த தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில்,  பல அரசியல் தலைவர்கள் இதற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

அவரது வலது செய்தி குறிப்பில், உழைக்கும் தோழர்களின் உன்னதத்தை உலகுக்கே எடுத்துரைக்கும் மே நன்னாளாம் இந்தப் பொன்னாளில், நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த உழைப்பாளர் நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி வரிசையில் இருந்தால், தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்துப் போராடியிருக்கிறோம். ஆட்சியில் இருக்கும் போது, அவர்களுக்கான உரிமைகளைப் பேணும் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துகிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்