INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நாளை நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் களமிறங்குகிறார்.

jaiswal and gill

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்தியா இந்த டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரண்டு அணியும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற முயற்சிக்கிறது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது,

அந்த வெற்றிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது. அதே சமயம் இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையவுள்ளது, ஏனென்றால், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் வருவது இந்தப் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் நாளை இந்தியாவுக்கு எதிரான இந்த மூன்றாவது போட்டியில் களமிறங்கவுள்ளார். கடைசியாக 2021 பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆர்ச்சர், முழங்கை மற்றும் முதுகு காயங்களால் நீண்ட காலம் விளையாடாமல் இருந்தார்.

இந்த ஆண்டு சசெக்ஸ் அணிக்காக ஒரு முதல் தர போட்டியில் 18 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்து, தனது உடற்தகுதியை நிரூபித்தார். இங்கிலாந்து பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம், ஆர்ச்சரின் உடற்தகுதி மற்றும் வேகத்தைப் பாராட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் அவரது மீண்டுவரவு அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் என்று கூறினார். ஆர்ச்சர், முதல் இரண்டு டெஸ்டுகளில் விளையாடிய ஜோஷ் டங்கிற்கு பதிலாக அணியில் இடம்பெறுகிறார்.

லார்ட்ஸ் மைதானம் ஆர்ச்சருக்கு சிறப்பான நினைவுகளை கொண்டது, ஏனெனில் 2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக அவர் வீசிய மறக்க முடியாத வேகப்பந்து வீச்சு, உலக கிரிக்கெட் ரசிகர்களால் இன்னும் பேசப்படுகிறது. இந்தப் போட்டியில், ஆர்ச்சரின் வேகம் மற்றும் துல்லியத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள வேண்டிய சவாலாக இருக்கும். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராவ்லி, பென் டகெட், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களுடன் ஆர்ச்சரின் வருகை அணியை மேலும் வலிமையாக்கியுள்ளது. எனவே, நாளை நடைபெறும் போட்டி எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க தொடங்கிவிட்டார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்