தோனியின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்ட ஜான்சீனா..!!

நடிகரும் WWE மல்யுத்த வீரருமான ஜான் சீனா , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில் ஐபிஎல் 2023 போட்டியின் போது, ஸ்டம்புகளுக்குப் பின்னால் இருந்து, ஜான் சினாவின் சின்னமான ‘நீ என்னைப் பார்க்க முடியாது’ என்ற சைகையை தோனி செய்வதைக் காணலாம்.
இதன் காரணமாக ஜான் சீனா தோனியின் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “இதை நம்ப முடியவில்லை” எனவும், ஜான் சினாவும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பார்க்கிறார் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தற்போது வரை மட்டும், 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் குவிந்துள்ளது.மேலும் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை அணியுடன் சேப்பாக் மைதானத்தில் மோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram