தடை உத்தரவு பிறப்பிக்க தேசிய பட்டியலின ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என உத்தரவு.
தேசிய பட்டியலின ஆணையத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற தடை விதித்த தேசிய பட்டியலின ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து சென்னை உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தில் உள்ள அம்மன் கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாதேபள்ளி கோயில் நில ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பவும், ஆவணங்களை பெறவும் மட்டுமே பட்டியலின ஆணையத்துக்கு உரிமை உண்டு எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியதற்காக ஆணையத்தில் புகார் அளித்த ஆக்கிரமிப்பாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்பாளர் சீனிவாசனுக்கு ரூ.2,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
