விளையாட்டு போட்டியில் பதக்கங்களை குவித்த மார்க் ஜுக்கர்பெர்க்..குவியும் வாழ்த்துக்கள்.!!

பேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது முதல் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஜியு-ஜிட்சு போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார். ஜியு-ஜிட்சு என்றால், ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இந்த தற்காப்பு கலையை போட்டியாக நடத்துவது வழக்கம்.
அந்த வகையில, நேற்று இந்த ஜியு-ஜிட்சு போட்டி நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட மார்க் ஜுக்கர்பெர்க் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்த அவர் “எனது முதல் ஜியு ஜிட்சு போட்டியில் பங்கேற்று கெரில்லா ஜியு ஜிட்சு அணிக்காக சில பதக்கங்களை வென்றேன். என்னைப் பயிற்றுவித்த டேவ் கேமரில்லோ, காய் வூ மற்றும் ஜேம்ஸ் டெர்ரிக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.