நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்து அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை செல்லும் பொழுது விமான நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ கூட இன்று காலையில் வைரல் ஆனது.
unknown nodeunknown nodeஏற்கனவே, ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்திற்கான ரிலீஸ் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து தற்போது லால் சலாம் திரைப்படத்தின் அப்டேட் வெளியாவதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
