#KarnatakaElections2023 வாக்கு பதிவு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தனது வாக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிவு செய்தார்.
இன்று கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பலரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். 224 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம், உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்குகளை பதிவு செய்து வரும் நிலையில், பெங்களூரு ஜெயநகரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். பெங்களூரு, ஜெயநகரில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார்.
மேலும், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் இன்று தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் வரும் மே 13 ஆம் தேதி வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025