உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம்… அரசாணை வெளியிடு.!

தமிழகத்தின் 25 உழவர் சந்தைகளில் தொன்மை சார் உணவகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உழவர் சந்தைகளில் சிறுதானியக்கூழ் வகைகள், சிற்றுண்டிகள் மற்றும் மூலிகை சூப் வகைகளுடன் கூடிய பாரம்பரிய உணவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட தொன்மை சார்ந்த உணவகங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிறு தானிய உணவு வகைகள் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற உணவுகள் மட்டுமே விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி வேலூர் ஆகிய இடங்களில் இந்த தொன்மைசார் உணவகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
