பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என பொள்ளாச்சி வழக்கில் கிடைத்திருக்கும் தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே, தமிழிசை, த.வெ.க தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.
அவர்களை தொடர்ந்து அடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” எனவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது!
அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! https://t.co/lG3uWR7yYp
— M.K.Stalin (@mkstalin) May 13, 2025