கர்நாடகாவை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் பாஜகவின் தோல்வி தொடரும்.! திமுக அமைச்சர் கருத்து.!

Minister Saminathan

மக்களை மத அளவில் மூளை சலவை செய்து ஆட்சியில் இருக்கிறது பாஜக என திமுக அமைச்சர் சாமிநாதன் விமர்சித்துள்ளார் . 

கர்நாடகாவில் நடப்பு ஆளும் கட்சியாகஇ இருந்த பாஜக நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை ஆட்சி கர்நாடகாவில் அமைந்து உள்ளது.

இந்த வெற்றி குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தென் இந்தியாவில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலமாக பாஜக இருந்து வந்த நிலையில் தற்போது அது மாறியுள்ளது.

பாஜகவின் தோல்வி குறித்து பேசிய திமுக அமைச்சர் சாமிநாதன், பாஜகவானது மத அடிப்படையில் மக்களை மூளை சலவை செய்து நீண்ட காலமாக ஆட்சி செய்து வருகிறது. அதிலிருந்து எப்போது மக்கள் விழித்துக்கொள்வார்களோ அப்போது பாஜக தோல்வியடையும். அது தற்போது தொடங்கியுள்ளது. விரைவில் மற்ற மாநிலங்களிலும் தொடரும் என செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்