எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும் – சிபிஎம் பொதுச்செயலாளர்

மாநிலகள் அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சீதாராம் யெச்சூரி பேட்டி.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதையை நிமித்தமாக நடைபெற்றதாக கூறப்பட்டது.
இதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீதாராம் யெச்சூரி, கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய நிலவரம் குறித்து முதலமைச்சரிடம் கலந்துரையாடினேன். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் விரைவில் நடைபெறும்.
இந்திய அரசமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க, மாநிலகள் அளவில் பாஜகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் சிபிஎம் பொதுச்செயலாளர் சிதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். இன்று மாலை விழுப்புரத்தில் நடைபெறும் பட்டியலின, பழங்குடியினர் மாநாட்டில் சிதாராம் யெச்சூரி பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025