வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான் – ஜெயக்குமார்

jeyakumar

அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது என ஜெயக்குமார் பேட்டி. 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியில் 24 மணி நேரமும் இடைவிடாமல் மின் வினியோகம் செய்யப்பட்டது.

ரூம் போட்டு ஊழல் எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் அமைச்சர் எப்படி மின்வளத்தை ஒழுங்காக பார்த்துக் கொள்வார். அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை குறித்து எப்படி பேசுவார்? மின்சாரம் என்பது 24 மணி நேரமும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். கை சுத்தமான ஆட்கள் துறையில் இருந்தால் இந்த கட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் டிடிவி தினகரன் போன்று பல தேர்தலை சந்தித்து தோல்வியடைந்த பின்பு ஆர் கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஜெயித்து வந்தவர் போல் நாங்கள் வரவில்லை. பணத்தை வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. நாங்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்கள் வழியில் தான் கட்சி நடத்தி வருகிறோம்.

 1998 இல் ஒரத்தநாட்டில் முதன் முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான், அப்படிபட்டவர் எடப்பாடி குறித்தும் என்னைப் பற்றியும் தேவையில்லாமல் பேசக்கூடாது. வைத்திலிங்கத்தை ஒன்றிய செயலாளர் பதவிக்கு ரெக்கமெண்ட் பண்ணதே நான் தான்; இல்லனா அவர யாருக்கு தெரியும்? என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்