அரசு உத்தரவை பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும் – நந்தகுமார்

இன்று அரசின் உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் இன்று செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் ஒன்றாம் தேதி பள்ளி திறக்கப்படவிருந்த நிலையில் தற்போது தள்ளி வைக்கப்பட்டு ஜூன் 7-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அரசின் உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் இன்று செயல்பட்டு வருகிறது. மாணவர்களை பள்ளிக்கு வரும்படி வாட்ஸ் அப் குழுவில் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் குறுந்தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது. இருப்பினும் குறைவான அளவிலான மாணவர்கள் தான் பள்ளிக்கு வருகை புரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து தனியார் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் அவர்கள் கூறுகையில், அரசு உத்தரவிட்டால் அதை தனியார் பள்ளிகள் கடைபிடிக்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்துவது தவறு. அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.