உ.பி.யின் முதல் தரை துறைமுகம்… பிரதமர் மோடி, நேபாள பிரதமர் பிரசந்தா இன்று திறந்து வைப்பு.!

Ind-Nepal PM

உத்தரப்பிரதேசத்தின் முதல் தரை துறைமுகத்தை பிரதமர் மோடி மற்றும் நேபாள பிரதமர் பிரசந்தா ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர்.

நேபாளத்தின் பிரதமராக பிரசந்தா கடந்த டிசம்பரில் பதவியேற்ற பின்பு முதல்முறையாக இந்தியாவிற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ளார். இது அவருக்கு பிரதமரான பிறகு முதல் வெளிநாட்டு பயணமும்கூட. பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் ‘பிரசந்தா’வும் இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இரு தரப்புகளிலும் எரிசக்தி, வர்த்தகம், இணைப்பு மற்றும் பல துறைகளில் இந்தியா-நேபாள ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்களும் இன்று  பேசுவார்கள். அவர்களின் சந்திப்பில் மின்சாரத் துறையில் இரு தரப்பு நாடுகளிலும் சேர்த்து ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் ஆழமாக்குவதும் முதன்மையான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-நேபாளம் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை முடித்துக்கொண்டு இரு பிரதமர்களும் இந்தியா-நேபாள எல்லையில் பஹ்ரைச்சில் உள்ள உத்தரபிரதேசத்தின் முதல் தரை துறைமுகத்தை(லேண்ட் போர்ட்) திறந்து வைக்க உள்ளனர். 115 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 200 கோடி ரூபாய் செலவில் இந்த ருபைதிஹா லேண்ட் போர்ட் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்