அமைச்சர்கள் பயணம்.. தமிழக அரசு உதவி… கட்டுப்பாட்டு அறையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! 

MK Stalin

ஒடிசா விபத்து குறித்து அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்களும் விபத்தில் சிக்கின. இந்த விபத்தில் 230க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 900க்கும் அதிகமானோர் விபத்தில் சிக்கிய பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் குறித்த தகவல்களை அறிய சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ஆய்வு செய்தார். அங்கு நடக்கும் மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், மூன்று ரயில்கள் விபத்துக்குளாகி 230க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்து ஆங்காங்கே இருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து அறிந்தவுடன் நேற்று இரவு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்-கை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தேன் என கூறினார்.

மேலும் பேசுகையில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் அரசு உயர் அதிகாரிகளுடன் ஒடிசா புறப்பட்டுள்ளனர். அங்கு 4,5 தினங்கள் தங்கி இருந்து தொடர்ந்து மீட்பு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர். தமிழகம் சார்பாக காவல் துறை சந்தீப் மிட்டல் ஒடிசா தலைமையிலான குழு ஒடிசா சென்று மீட்பு பணிகளில் உதவ உள்ளனர் என தெரிவித்தார்.

விபத்து பற்றி அறிந்தவுடன் தமிழக மாநில அரசு சார்பில் கட்டுப்பட்டு அறை நேற்றிரவு முதல் செயல்ப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக தமிழ்நாடு வந்து சேர முடியாதவர்களை மீட்க சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்தோர் உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஒடிசா மாநில அதிகாரிகளோடு நமது மாநில அதிகாரிகள் இணைந்து செயல்படுகிறார்கள். விபத்தில் உயிரிழந்தோருக்காக இன்று ஒருநாள் துக்க அனுசரிப்பு மேற்கொள்ள உள்ளோம் எனவும், தமிழக அரசு சார்பில் உயிரிழந்தோருக்கு 5 லட்ச ரூபாய் நிவராண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்