ஒடிசா பயணம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!

ஒடிசாவிற்கு நேரில் சென்று பார்த்தபின், தகவல் தெரிவிக்கப்படும் என ஒடிசா பயணத்திற்கு முன் அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாஹனகா ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணி அளவில் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 233 பேர் உயிரிழந்ததாகவும், 900-க்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா புறப்பட்டார்.
அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு விமானம் மூலம் ஒடிசா பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்திற்கு முன்பு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி, இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது சரியாக தெரியவில்லை.
இதுவரை வந்த தகவல்கள் கேட்டு வருத்தம் அடைந்தேன், ஒடிசாவிற்கு நேரில் சென்று பார்த்த பின் சரியான தகவல் தெரிவிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.