விபத்து பகுதிக்கு விரைந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு.! மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்.!

விபத்தில் சிக்கி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவி செய்ய எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து 2 மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 900க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தில் ஒடிசா மாநில முதல்வர், மத்திய அமைச்சர்கள் , தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று மீட்பு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலசோர் மாவட்டத்திற்கு சுற்றுப்புறத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உதவுதற்காக புவனேஷ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இரண்டு மருத்துவர்கள் குழுவானது சம்பவ இடத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Two teams of doctors from @AIIMSBhubaneswr have been dispatched for Balasore & Cuttack to assist in relief operations at the rail accident site in Odisha.
We are providing all required help & medical assistance to the victims of the tragic train accident to save precious lives.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) June 3, 2023