ஒடிசா ரயில் விபத்து – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை அளிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ரயில் விபத்தில் மீட்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பான நிலவரம் குறித்து ஒடிசா சென்றுள்ள தமிழ்நாட்டு குழுவிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழுவிடம் காணொளி மூலம் நிலவரத்தை கேட்டறிந்தார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர், ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒடிசா சென்றுள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உதவுவதற்காக அரசு சார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, பால்சோர் மாவட்டம் பாகநாகாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் தமிழக குழு ஆய்வு செய்தது. இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் மீட்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வருவது, சிகிச்சை அளிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.