இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

இலக்கியாவுடன் எனக்கு எந்தவித தனிப்பட்ட தொடர்பும் இல்லை என திலீப் சுப்பராயன் விளக்கம் அளித்துள்ளார்.

dhilip subbarayan Elakkiya

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ் திரைப்படங்களின் சண்டைப் பயிற்சியாளர் மற்றும் தயாரிப்பாளர் திலீப் சுப்பராயன் காரணம் என்று கூறி எழுந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் பெரிய அளவுக்கு பேசுபொருளாக வெடித்துள்ளது. இலக்கியா, தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னதாக பதிவு ஒன்று போட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது.

இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், திலீப் சுப்பராயன் தன்னை உணர்ச்சி ரீதியாக மிரட்டியதாகவும், தனது தற்கொலை முயற்சிக்கு அவர் மீதான மன அழுத்தமே காரணம் என்றும் குற்றம்சாட்டியிருந்தாக செய்திகள் வெளியானது. உண்மையில் அந்த பதிவு அவருடைய சமூக வலைதளங்களில் இருந்து வந்ததா? என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இப்படியான சூழலில், இந்த செய்தி தீ போல பரவி வருவதால் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த திலீப் சுப்பராயன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கால் செய்து பேசி விளக்கம் அளித்தார். இலக்கியாவுடன் எனக்கு எந்தவித தனிப்பட்ட தொடர்பும் இல்லை. இது எனது நற்பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் பரப்பப்படும் வதந்தி. அவரது மனநிலை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பில் என்னுடைய ஸ்டண்ட் கலைஞர் இழந்துவிட்ட துக்கத்தில் இருக்கிறேன். இன்னும் அதில் இருந்தே நான் மீள வில்லை.

யாரோ என்னுடைய பெயரை கெடுக்கவேண்டும் என்று இப்படி செய்கிறார்களோ என தோணுகிறது. ஆனால், அது யார் என்று தெரியவில்லை. நான் இதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால், நான் மக்களிடம் சொல்லிக்கொள்ளும் விஷயம் என்னவென்றால், என்னை பற்றி இப்படி பரவும் தகவல் என்பது முழுக்க முழுக்க வதந்தியாக பரவும் தகவல் தான்” எனவும் திலீப் சுப்பராயன் கூறியுள்ளார். மேலும், இலக்கியாவின் புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்