தூத்துக்குடி விமான நிலையம் இன்று திறப்பு.., சிறப்பம்சங்கள் என்னென்ன.?
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் உட்பட 4,800 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படுகிறது. விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு பணியில் 2100 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் உள்ளன. தூத்துக்குடி நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள வாகைகுளத்தில் அமைந்துள்ளது. சென்னை, பெங்களூரு, மற்றும் பிற முக்கிய நகரங்களுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.
மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு கூடுதல் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த விரிவாக்கம் தூத்துக்குடி விமான நிலையத்தை தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியமான விமான நிலையமாக உயர்த்துவதுடன், தூத்துக்குடி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:
- இந்த புதிய முனையக் கட்டிடம் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. 4 நுழைவு வாயில்கள், 21 செக்-இன் கவுண்ட்டர்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள், மற்றும் 2 கன்வேயர் பெல்ட்கள் உள்ளன.
- ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 644 இருக்கைகள் மற்றும் 2 விஐபி ஒய்வு அறைகள் உள்ளன.
- ஓடுபாதையின் நீளம் 1,350 மீட்டரில் இருந்து 3,115 மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளது. 45 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதை, மிகப்பெரிய ஏ-321 ரக ஏர்பஸ் விமானங்களும் தூத்துக்குடிக்கு இனி வந்து செல்ல முடியும்.
- ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விரிகுடா (Isolation Bay) மற்றும் டாக்ஸி இணைப்பு வழி.
- புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) கோபுரம், தீயணைப்பு நிலையம், மற்றும் தொழில்நுட்பத் தொகுதி.
- 500 பயணி வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி. தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க 1 கி.மீ. இணைப்பு சாலை.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025