பாலசோர் ரயில் விபத்து… விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்.!

ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் நிபுணர் குழு தலைமையில் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
ஒடிசா மூன்று ரயில்கள் மோதிய கோர விபத்தில் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விபத்து குறித்த விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான நிபுணர்கள் குழு இந்த விபத்து குறித்து விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்திய இரயில்வே, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரயில்களில் கவாச் எனும் தானியங்கி ரயில் பாதுகாப்பு (ATP) அமைப்பை பொருத்துவதற்கான வழிகாட்டுதல்கள்/வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்த பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது.