ஒடிசாவில் 8 தமிழர்களின் நிலை.? தகவல் தெரிந்தால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.!!

OdishaTrainAccident

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் 8 பேரின் நிலை குறித்து இதுவரை இன்னும் அறியப்படவில்லை என்றும் , அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” இந்த இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

  • 04428593990
  • 9445869843

8 பேர்களின் பெயர்

koramandaltrain tn list
koramandaltrain tn list [Image source : file image]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்