இந்த இலையில் இப்படி ஒரு ஆற்றல் உள்ளதா…? வாங்க பார்க்கலாம்..!

brigaraj

கரிசலாங்கண்ணி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் 

கரிசலாங்கண்ணி, வெண்கரிசலை அல்லது கையாந்தகரை ஒரு மருத்துவ மூலிகை செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளைக் கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிறப் பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

இதற்கு கரிச்சை, கரியசாலை, கரிக்கை, கைகேசி, கரிக்கண்டு, கையாந்தகரை, பிருங்கராஜம், தேகராஜம், கரிசணாங்கண்ணி, கரிசனம், பொற்றலைக்கையான் மஞ்சள் கரிசாலை ஆகிய வேறு பெயர்களும் உண்டு. தற்போது இந்த பதிவில், கரிசலாங்கண்ணியின் (பிருங்கராஜம்) நன்மைகள் பற்றி பார்ப்போம்.

இரத்தம் சுத்தமாகும் 

blood
blood [Imagesource : Representative]
தினமும் மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரையை உபயோகித்து வந்தால், இரத்தத்தில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்பட்டு இரத்தம்  சுத்தமாகும். மேலும் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம். கரிசலாங்கண்ணி இலையையும், கருவேப்பிலை இலையையும் காய வைத்து இடித்து தூள் செய்து இரண்டும் சம அளவு கலந்து கொண்டு  காலை மாலை இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்து வந்தால்,  இரத்த மூலம், இரத்த சோகை, பெண்களின் சீரற்ற மாதவிடாய்  சுழற்சி சரியாகும்.

வலி நிவாரணி

pain
pain [Imagesource : Representative]
இயற்கையான பிரிங்ராஜ் மூலிகையின் செயலில் உள்ள பொருட்கள் வலியைக் குறைக்க மத்திய நரம்பு மண்டலத்தில் நேரடியாக வேலை செய்கின்றன. வலியைக் குணப்படுத்தும் பல்வேறு மருந்துகளில் இது அடிக்கடி வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுகிறது.

முடிஉதிர்வு 

எல்லா பெண்களும் நீண்ட, ஆரோக்கியமான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள். இப்படிப்பட்ட பெண்கள் கரிசலாங்கண்ணியின் வேர்களை நீங்கள் உபயோகிக்கக்கூடிய எண்ணெயில் கலந்து வைத்தால், உச்சந்தலையில் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுகிறது.

hairfalls
hairfalls [Imagesource : Representative]
முடிக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதன் மூலம், இது புதிய மயிர்க்கால்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த எண்ணெய் முழுமையாக உறிஞ்சப்படுவதை உறுதிசெய்ய, 10 நிமிடங்களுக்கு உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

உடல் சூடு 

bodyheat
bodyheat [Imagesource : Representative]
சிலருக்கு எப்போதுமே உடல் சூடாக இருப்பது தான் வழக்கம். இந்த பிரச்சனை உள்ளவர்கள், உடல் சூட்டைக் குறைப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலத்தை தேய்த்து குளித்து வர உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியடையும்.

சளி தொல்லை

cold
cold [Imagesource : representative]
சளி, இருமல் பிரச்சினைக்கு உள்ளவர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவருமே இந்த கரிசலாங்கண்ணி சாறை மருந்தாக பயன்படுத்தலாம். இந்த சாறை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் 2 சொட்டு கரிசலாங்கண்ணி சாறில் சில துளிகள் தேன் சேர்த்து குழைத்து நாக்கில் தடவலாம். அதே சமயம் பெரியவர்களாக இருந்தால் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக் கொள்ளலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies