#Breaking : பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியீடு…!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது
பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினத்தோடு கால அவகாசம் நிறைவடைந்ததது.இதனையடுத்து, பொறியியல் படிப்பில் சேர 2,28,122 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,86,000 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாகவே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று ரேண்டம் எண் வெளியிடப்பட உள்ளது. ரேண்டம் எண் என்பது தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தர வரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எனப்படும் சமய வாய்ப்பு எண் வழங்கப்படுகிறது. சான்றிதழ்களை ஜூன்-9-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தரவரிசை பட்டியல் வரும் 26-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்த நிலையில், தற்போது பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை www.tneaonline.org என்ற இணையப்பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.