இந்தெந்த மாவட்டங்களில் உழவர் சந்தை புதுப்பிப்பு.. நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு.
உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. அதன்படி, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு. குடிநீர் இணைப்பு, கழிவறை வசதி, நடைபாதை அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இதன் மூலம் ஏற்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த உழவர் சந்தை திட்டம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும், இந்த திட்டம் தற்போது பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளை 8.75 கோடி செலவில் புனரமைக்கபட உள்ளது. அலுவலக அறை புதுப்பித்தல், கழிப்பறை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், குடிநீர் அமைப்பு, பாதுகாப்பு சுவர், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு, நடைபாதை அமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.