ஒடிசா ரயில் விபத்து – தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் பாராட்டு..!

மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட வெங்கடேசனை பாராட்டுகிறேன் என முதல்வர் ட்வீட்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்தனர். இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் துரிதமாக செயல்பட்டு பல உயிர்களை காப்பாற்றிய NDRF வீரர் வெங்கடேசனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில ட்விட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள். உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
#OdishaTrainAccident-இல் பல உயிர்களைக் காப்பாற்றக் காரணமாக இருந்துள்ளார் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசன் அவர்கள்.
உரிய நேரத்தில் அவர் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, அருகிலிருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர் விரைந்து வந்ததினால்… https://t.co/EizFt742iK
— M.K.Stalin (@mkstalin) June 6, 2023