ஆதிபுருஷ் வெளியிட்டு திரையரங்குகளில் அனுமருக்கு ஒரு இருக்கை – படக்குழுவின் வினோனத அறிவிப்பு.!

ஆதிபுருஷ் படத்தின் திரையரங்கின் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு இருக்கையை அனுமருக்காக காலியாக விடப்போகிறோம் என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
ஓம் ரவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன் மற்றும் சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சைஃப் அலி கான் வில்லனாக நடிக்கிறார், இதில் தேவதத்தா நாகே மற்றும் சன்னி சிங் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம், இந்திய புராணக் கதையான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம் பற்றி பேச்சுக்கள் அதிகமாக உள்ளது. அந்த வகையில், தற்போது ‘ஆதிபுருஷ்’ திரையிடப்படும் அனைத்து திரையரங்குகளில் அனுமருக்கு ஒரு இருக்கை காலியாக விடப்படும் என்ற படக்குழுவினர் அறிவித்ததுள்ளனர்.
இது குறித்து அவர்களது ட்விட்டர் பக்கத்தில், “பக்தி, பக்தி, விசுவாசத்தின் உருவான அனுமனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு திரையரங்கிலும் இருக்கையை காலியாக வைக்க உள்ளோம் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில், திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக அரங்கத்தில் இன்று மாலை 6 மணி முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர்.