நான் திரும்ப வரேன்…கிரிக்கெட்டில் மீண்டும் மாஸ் எண்டரி கொடுக்க காத்திருக்கும் சின்ன தல ரெய்னா.!!

suresh raina

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  சுரேஷ் ரெய்னாவின் பெயர் லங்கா பிரீமியர் லீக் 2023-க்கான வீரர்கள் ஏலம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது .

இதற்கிடையில், வரும் 14-ஆம் ஆம் தேதி தொடங்கும்  ஐந்து அணிகள் பங்கேற்கும்  ஏலத்தில் விடப்படும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) திங்கள்கிழமை வெளியிட்டது.

அந்த ஏலத்தின் பட்டியலில் தான் சுரேஷ் ரெய்னாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.இந்த வருடம் நடைபெற இருக்கும் ஏலத்தில் சுரேஷ் ரைனா கலந்துகொள்ள அவர் தனது பெயரையும் பதிவு பதிவு செய்துள்ள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

36 வயதான ரெய்னா, 2008 மற்றும் 2021 க்கு இடையில் ஐபிஎல் போட்டியின் ஒவ்வொரு சீசனிலும் விளையாடினார். 205 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 5,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.  மேலும், லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் இதற்கு முன்பு இந்தியாவின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கடந்த 2020 ஆம் ஆண்டு விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்