அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..! 22 ராணுவ வீரர்கள் காயம்..!

வடக்கு சிரியாவில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 22 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வடக்கு சிரியாவில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 22 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். மருத்துவக்குழு வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதில் 10 பேர் உயர் பராமரிப்பு வசதிகளுகாக சென்ட்காம் ஏஓஆர் கண்காணிப்பு பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகப்படும் விதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. இருந்தும் இந்த விபத்திற்கான காரணம் தெரியாததால் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் தெரிவித்துள்ளது.
— U.S. Central Command (@CENTCOM) June 13, 2023