ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது – சீமான்

ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது என சீமான் பேட்டி.
நேற்று செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், அதிமுக ஒரு ஊழல் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஊழலுக்காக சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர். அதனால் தமிழ்நாடு ஊழல் மாநிலம் என பேட்டியளித்திருந்தார்.
இதற்க்கு அதிமுக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சீமான் அவர்கள், செய்தியாளர்களிடம் ஜெயலலிதா என்ன குற்றத்திற்காக சிறைக்கு சென்றார்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், ஒருவர் செய்த தீமைகள், அவர் இறந்த பிறகு புனிதமாகிவிடாது என தெரிவித்துள்ளார்.